Header image alt text

05.06.1987இல் பூசா முகாமில் மரணித்த தோழர் மோகன் (கந்தையா ஜீவராஜா) அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவுகள்…

தியாகி உரும்பிராய் பொன்.சிவகுமாரன் (பொன்னுத்துரை சிவகுமாரன்) அவர்களின் 51ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். பொன்.சிவகுமாரன் அவர்கள் தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப ஹர்த்தாக்களில் ஒருவராவார். அவர் தமிழ் மக்கள் மத்தியில் அன்பையும், மதிப்பினையும் பெருமளவில் பெற்றிருந்தார். இலங்கை போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களின் விடிவிற்காக முதன்முறையாக தம் இன்னுயிரைத் தியாகம் செய்து ஒரு வரலாறினை இவர் படைத்தார்.

Read more

அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் போல அரச அதிகாரிகளும் மாற வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பழைய பழக்கங்களை விட்டுவிட்டு புதிய பழக்கங்களைத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார். கேகாலையில் உள்ள நிதஹஸ் மாவத்தையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வில் ஜனாதிபதி இது தொடர்பில் உரையாற்றினார்.

Read more

உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு இன்று காலை கேகாலையில் உள்ள நிதஹஸ் மாவத்தையில் ஆரம்பமானது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்குபற்றியுள்ளனர். அத்துடன், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அரசாங்கம் சுற்றாடல் வாரத்தையும் அறிவித்துள்ளது. இதனிடையே சுற்றுலா விடுதிகளைச் சூழவுள்ள கடற்கரை பகுதிகளில் தூய்மையைப் பேணும் நோக்கில் விடுதி கடற்கரை பராமரிப்பாளர்களை நியமிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Read more

நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தரும் நோயாளர்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். பதவி உயர்வில் நிலவும் தாமதம் மற்றும் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்னிறுத்தி காலை 8 மணி முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

Read more

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. வெள்ளவத்தை – ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்துத் தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

12 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பை முன்னிட்டு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான், மியன்மார், சாட், கொங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹெய்ட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் யேமன் ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read more

திருகோணமலை – குச்சவெளி பகுதியில் மீனவர் ஒருவர் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவம் குறித்து கடற்படை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பில் கடற்படை பேச்சாளரைத் தொடர்பு கொண்டு வினவியபோது, குறித்த சம்பவம் தொடர்பில் அவர் விளக்கமளித்தார். சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட சில தரப்பினரைக் கைது செய்து, கரைக்கு அழைத்துவர முற்பட்டபோது, அவர்கள் கடற்படையினரின் பிடியிலிருந்து தமது படகை விடுவித்துத் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.

Read more

திடீர் நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்ட சுமார் 60 மாணவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவு ஒவ்வாமையினால் குறித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், குறித்த மாணவர்களின் உடல்நிலை ஆபத்தானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் வழங்கப்பட்ட உணவினை உட்கொண்ட, ஆரம்பப் பிரிவு மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதவி உயர்வு மற்றும் இணை சுகாதார பட்டதாரிகளின் ஆட்சேர்ப்பு தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்துத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.  நாடு முழுவதும் நாளை காலை 8 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.  அதன்படி, கலந்துரையாடலின்றி வேலைநிறுத்தத்தைக் கைவிட நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.