Posted by plotenewseditor on 2 June 2025
Posted in செய்திகள்
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்று(02) ஆரம்பமாவதாக பொது நிர்வாக, மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்தது. இதற்கிணங்க ஒரு அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக்குழு 50 வீதம் பெரும்பான்மை பெற்ற 161 உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளின் பணிகள் இன்று(02) ஆரம்பமாகவுள்ளன. தனிப்பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகளில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களுக்கு உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்களின் வழிநடத்தலின் கீழ் ஆட்சியமைப்பதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. Read more