
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகட்டும். பொருளாதார வீழ்ச்சி, உணவுப் பாதுகாப்பின்மை, அதிகரிக்கும் போதைப் பொருள் பாவனை, எங்கும் எதிலும் நிறைந்துள்ள ஊழல், பலாத்காரமான முறையிலான பௌத்த மயமாக்கல் என அனைத்து கேடுகளுக்கும் முகம் கொடுத்து அதிலிருந்து மீண்டு வரவேண்டும் என்று உறுதியெடுத்துக் கொள்ளும் வேளையில் புதிய ஆண்டில் நுழைகின்றோம்.
ஜெர்மன் கிளை சார்பாக தோழர் ஜெகநாதன் அவர்களால் வெள்ள நிவாரணத்துக்காக வழங்கிவைக்கப்பட்ட ரூபா 100,000/=, UK தோழர் முகுந்தன் அவர்களால் வழங்கப்பட்ட ரூபா 50,000/= பணத்தில் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக முல்லைத்தீவில் பல்வேறு பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டது. முல்லை மக்கள் சார்பாக தோழர்கள் ஜெகநாதன், முகுந்தன் ஆகியோர்க்கு நன்றிகள்.
31.12.1994இல் கொழும்பில் மரணித்த எமது கட்சியின் முன்னாள் உபதலைவர் தோழர் கரவை அங்கிள் (ஏ.சி. கந்தசாமி- கரவெட்டி) அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.. தோழர் கரவை ஏ.சி.கந்தசாமி (கரவை அங்கிள்) அவர்கள் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தில் நீண்டகாலமாக தன்னை இணைத்து செயற்பட்டு வந்தார். இடதுசாரி கொள்கையில் தீவிர பற்றுக் கொண்டு செயற்பட்டுவந்த தோழர் கரவை கந்தசாமி அவர்கள் சிங்கள சமூகத்தின் முற்போக்கு சக்திகளின் நண்பனாகவும் திகழ்ந்தார்.
பொருட்களின் இருப்பிடத்தை அறிவதற்கான மிகவும் மலிவான புதிய மின்னணு பொறிமுறை ஒன்றைக்கண்டுபிடித்த இலங்கை தமிழர் ஒருவருக்கு பிரித்தானியாவில் விருது ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரான சபேசன் சிதம்பரநாதன் என்பவருக்கே King’s New Year Honors விருது வழங்கப்படவுள்ளது. இவர் தேசிய சுகாதார சேவை அறக்கட்டளைகள்இ வைத்தியசாலைகள்இ விமான உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாரளர்கள் பயன்படுத்தும் இருப்பிட கண்காணிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கான பதிவு நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் பதிவு நடவடிக்கைகளை பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால் அது தொடர்பான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த தீர்மானிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கிணங்க, 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் விரைவில் காட்சிப்படுத்தப்பவுள்ளது.
அனர்த்தங்கள் காரணமாக கடமைக்கு சமூகமளிக்க முடியாது போன தினங்களுக்கு அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2023 செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது. நாட்டின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பட்ட வௌ்ளம், மண்சரிவு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஆகியன காரணமாக தமது கடமைகளுக்கு சமூகமளிக்க முடியாத அரச உத்தியோகத்தர்கள் இந்த விசேட விடுமுறையை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26.12.2023 செவ்வாய்க்கிழமை பிரான்ஸில் காலமான ஜோன் பப்ரிஸ்ட் பாலகுமார் (மல்லாவி) அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்ப உறவுகளோடு, நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொள்கிறோம்.
வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளி மாணவர்களின் கலைவிழாவும் மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இன்று 12.30.2023 பாடசாலை ஆசிரியரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்தியகுழு உறுப்பினரும், முன்னாள் வவுனியா நகரசபை உப தலைவரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான தோழர் க.சந்திரகுலசிங்கம் மோகன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் தேசிய அமைப்பாளர் தோழர் பீட்டர், முன்னாள் நகரசபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் தொழிச்சங்க பிரிவு பொறுப்பாளருமான தோழர் காண்டீபன்,
இலங்கையில் பெருந்தோட்ட தொழில்துறையை நிறுவிய இந்திய வம்வாவளி தமிழர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா நினைவு அஞ்சல் முத்திரையை வெளியிடவுள்ளார். இந்தியாவின் புதுடெல்லியில் இதற்கான நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. இலங்கையின் சார்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் குறித்த முத்திரையை பெற்றுக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை இந்தியாவின் ‘நாகரிக இரட்டையர்’ என இந்திய பிரதமர் நரேந்திர மோடி நம்புவதாக பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று உள்ளிட்ட நோய்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிகிச்சைகளுக்காக நாளாந்தம் வைத்தியசாலைகளுக்கு வருகைத்தரும் நோயாளர்களின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தற்போது பரவி வரும் நோய்நிலைமைகளில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக பொது மக்கள் முகக்கவசங்களை அணிதல் மற்றும் கொரோனா தொற்று காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம் எனவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.