Header image alt text

இலங்கை வங்கிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை வங்கியின் புதிய தலைவராக காவிந்த டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பில் இதுவரை 1642 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பாக 1592 முறைப்பாடுகளும், வன்முறைகள் தொடர்பில் 15 முறைப்பாடுகளும், ஏனைய தேர்தல் குற்றங்களின் அடிப்படையில் 35 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. Read more

முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பிரேமரத்னவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட 4 வருடக் கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. பெண் ஒருவருக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுப்பதற்காக 50இ000 ரூபாவினை கையூட்டலாகப் பெற்றுக் கொண்ட குற்றத்துக்காகப் பிரதிவாதிக்கு இந்த தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. Read more

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமது கணவரைப் போல, மரண அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள தம்மையும் கொலை செய்வதற்குச் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். Read more

நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் நாளை முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான திகதி மற்றும் நேரத்தினை முன்பதிவு செய்ய முடியும் என பதில் குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளார். Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என ஜே.வி.பியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கே ஆதரவளிக்கவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார். Read more

மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர்கள் நாளை கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசிக்கும் வகையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

04.11.2004 அன்று தெஹிவளையில் மரணித்த தோழர் தயாளன் (வேலாயுதன் தயாளகுமார் – கட்டுவன்) அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
மலர்வு : 1961.07.22
உதிர்வு : 2004.11.04

கடவுச்சீட்டு பெறுகைக்கான கால ஒதுக்கத்தை இணையவழியில் மேற்கொள்ளும் நடைமுறை எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் அமுலாகவுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நிலுசா பாலசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டு பெறுகைக்காக பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு முன்னால் பல நாட்களாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் புதிய தலைவராக சுனில் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி கட்டுநாயக்கவில் உள்ள அதிகாரசபையின் தலைமை அலுவலகத்தில் இன்று அவர் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிகழ்வில் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சாகர கொட்டகதெனிய மற்றும் அதிகாரிகள் குழுவும் கலந்துகொண்டுள்ளனர்.