Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள். ஒரு சமூகமாய், தேசிய இனமாய் நாம் முகம் கொடுக்கும் அத்தனை சவால்களையும் வெற்றிகொள்ளும் செயற்பாடுகளை மலரும் புத்தாண்டில் ஒற்றுமையான, நீண்டு நிலைத்திருக்கக்கூடிய செயற்பாடுகளால் வலிமை பெறச் செய்திடுவோம்.

Read more

தேர்தல் தொடர்பில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படலாம் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பான விடயங்களை உள்ளடக்கி தெற்காசிய பொருளாதார மேம்பாடு தொடர்பிலான அறிக்கையொன்றை ஆசிய அபிவிருத்தி வங்கி வௌியிட்டுள்ளது. எதிர்வரும் தேர்தல் மற்றும் அதனுடன் இலங்கையின் நிதிக்கொள்கை, பொருளாதார மறுசீரமைப்பு என்பன உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதற்கான அபாயம் காணப்படுவதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Read more

தேர்தல் முறையை திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜூன் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் மாதவ தேவசுரேந்திர குறிப்பிட்டார். 2023 ஒக்டோபர் 15 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் இம்மாதம் 15 ஆம் திகதி நிறைவடையவிருந்தது. Read more

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக எதிர்வரும் 05 வருடங்களுக்குப் பணியாற்றுவதற்காக, கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் அவர் நிறைவேற்றுப் பணிப்பாளராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்படி இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் எதிர்வரும் 05 ஆண்டுகளுக்கு கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக பணியாற்றுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.