Header image alt text

குருணாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த பெண் திடீரென உயிரிழந்தார். இதன்படி, உயிரிழந்த பெண்ணுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. சம்பவத்தில் குருணாகல் ரிதிகம பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சீன அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிர்மாணப் பணிகளை சீன நிறுவனங்கள் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சின் செயலாளர் W.S.சத்யானந்தா குறிப்பிட்டார். கொட்டாவ, மஹரகம, பேலியகொட, தெமட்டகொட, மொரட்டுவை பகுதிகளில் இந்த வீடமைப்புத் திட்டங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் 1996 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்காக சீன அரசாங்கம் 24.48 பில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது. Read more

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் ​மே மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் மீதான மீள் பரிசீலனை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனினும், விசேட தேவையுடைய விண்ணப்பதாரர்களின் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடைபெற்றது. பரீட்சையில் 3,42,883 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.