Header image alt text

இந்தோனேசியா இலங்கையுடனான தமது வர்த்தக உடன்படிக்கையை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் குறித்த கலந்துரையாடல்களை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக இந்தோனேசிய வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு வழிவகுக்கும் வகையில் இந்த முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்தாகவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாக இந்தோனேசிய வர்த்தக அமைச்சு கூறியுள்ளது. Read more

11.04.1984 ல் ஆரியகுளம் சந்தியில் மரணித்த மாணவர் பேரவையின் தோழர்கள் கேதீஸ்வரன் (தம்பலகமம்), கிருபானந்தன் (கொக்குவில்) ஆகியோரின் 40ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

11.04.2014 ல் யாழ்ப்பாணத்தில் மரணித்த தோழர் நந்தன் (பசுபதி பரசோதிலிங்கம் – மல்லாவி) அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று…

இலங்கையில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையிலான அரச எதிர்ப்புக்களையும் தடுப்பதற்கு சட்ட அமுலாக்கத்துறையினர் முனைப்புக் காட்டுவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதிக்கு இடையில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட 30 போராட்டங்கள் குறித்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. Read more

மியன்மாரில் பயங்கரவாத தடுப்பு முகாமில் இருந்து மீட்கப்பட்ட  8 இலங்கையர்கள் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மார்ச் முதலாம் திகதி மீட்கப்பட்ட 08 பேரையும் விரைவில் நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜானக பண்டார தெரிவித்தார். தற்போது மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள ஏனைய 48 இலங்கையர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என அவர் கூறினார். Read more

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்திற்கு 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உயர் தொழில்நுட்ப ஸ்கேன் இயந்திரங்களை ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது. வெளிநாட்டவர்கள் மூலமாக இலங்கையில் பரவும் வைரஸ் மற்றும் தொற்றுநோய்கள் போன்ற பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் நிலைமைகளை கண்காணிப்பதற்காகவே இந்த ஸ்கேன் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர்  MIZUKOSHI Hideaki துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்  நிமல் சிறிபால டி சில்வாவிடம் இவற்றை கையளித்துள்ளார். Read more

இலங்கை போன்ற நட்பு நாடுகளுக்கு நவீன ஆயுதங்களை வழங்க புதுடெல்லி தயாராக உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற இந்திய இலங்கை பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கை இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு மற்றும் அண்டைய நாடு என்ற அடிப்படையில் இந்த ஒத்துழைப்புக்களை வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.