Header image alt text

01.04.1993 அன்று வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் கரன் (வீரபுத்திரன் இன்பரவி – கடுக்காமுனை), காளிதாஸ் (அங்குசாமி சந்திரமோகன் – ஏறாவூர்), மதன் (கிறிஸ்டியான் ஜெபஸ்டியான் – கல்லடி) ஆகியோரின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..

நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குமாறு அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் ஏகமனதாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் கொழும்பு டார்லி வீதியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, இவ்விடயம் தொடர்பில் மேலும் கலந்துரையாடி உரிய தீர்மானம் எடுக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

வேதன பிரச்சினையை முன்னிறுத்தி இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதற்கமைய தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் இன்றுகாலை 6.30முதல் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக சுகாதார தொழிற்சங்கங்களினது கூட்டமைப்பின் அழைப்பாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். இன்று தமது பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்க அதிகாரிகள் தவறினால் நாளை முதல் நாடளாவிய ரீதியில் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

மியான்மரில் உள்ள இணையவழி குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதில் அரசாங்கம் காலதாமதம் செய்து வருவதாக அங்கு சிக்கியுள்ள இலங்கை இளைஞர் தெரிவித்தார். உகாண்டா அரசாங்கம் தலையீடு செய்து அந்த முகாம்களில் இருந்த தங்களது நாட்டு பிரஜைகள் குழுவை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. மியான்மர் தாய்லாந்து எல்லைக்கு இடையில் பயங்கரவாத குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள ‘சைபர் கிரிமினல் ஏரியா” எனப்படும் 3 முகாம்களில் 56 இலங்கையர்கள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியிருந்தது. Read more

கடவுச்சீட்டு வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச விடுவிக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குடிவரவுச் சட்டத்தை மீறிச் செயலற்ற கடவுச்சீட்டுடன் வெளிநாடு செல்ல முயற்சித்ததாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.