Header image alt text

நுவரெலியா மாவட்டத்தின் சுற்றுலாத் தொழில்துறையின் மறுமலர்ச்சி தொடர்பில் ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா உடபுசல்லாவை – Court Lodge தோட்டத்திற்கு இன்று (16) காலை கள விஜயம் மேற்கொண்டிருந்தார். Pekoe Trail வழியாக 3.2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற ஜனாதிபதி, Court Lodge தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார். Pekoe Trail என்பது இலங்கையின் மத்திய மலைப்பகுதி ஊடான 300 கிலோமீட்டர் கொண்ட மலையேற்ற பாதையாகும். கண்டி நகரிலிருந்து ஆரம்பமாகி, தெற்கே ஹட்டன் ஹோர்டன் சமவெளி தேசிய பூங்காவை நோக்கி இதனூடாக பயணிக்க முடியும். Read more

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தமக்கு பல தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதன்படி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுப்பதாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

COVID தொற்றுக்குள்ளான பிரான்ஸ் நாட்டு பெண் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார். பிரான்ஸிலிருந்து ஆயுர்வேத சிகிச்சைக்காக வருகை தந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த பெண் உயிரிழந்ததாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருமான மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். Read more

இந்தியாவைப் போன்று இலங்கையிலும் மீன்பிடித் தடைக்காலத்தை அமுல்ப்படுத்த வேண்டும் என கடற்றொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நேற்று முதல் எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை மீன்பிடித் தடைக்காலம் இந்தியாவில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் அந்த நடைமுறை பின்பற்றப்படாமை குறித்து அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா ஊடகத்திற்கு கூறுகையில், கடந்த 3 வருடங்களாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் எந்தவொரு அரசாங்கமும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. Read more