Header image alt text

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)யின் திருகோணமலை மாவட்டக் குழுவின் அங்குரார்ப்பணக் கூட்டம் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூட்டணியின் இணைத்தலைவர்களுள் ஒருவரான சுரேஸ் பிரேமச்சந்திரன், கூட்டணியின் செயலாளர் ந.இரட்ணலிங்கம், கூட்டணியின் தேசிய அமைப்பாளர் கோ.கருணாகரம் (ஜனா), கூட்டணியின் துணைத் தேசிய அமைப்பாளர் இரா.துரைரெட்ணம், கூட்டணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் க.சிவநேசன், வேந்தன் மற்றும் கூட்டணியின் திருகோணமலை மாவட்டக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Read more

26.04.1977இல் அமரத்துவமடைந்த தந்தை செல்வா (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) அவர்களின் 47ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

 27.04.1991இல் வவுனியா தாண்டிக்குளத்தில் மரணித்த தோழர்கள் சேகர் (முருகேசு வடிவேல் – திருவையாறு), ரவி (கிளைமண்ட் எதிர்மன்னசிங்கம் – குருநகர்) ஆகியோரின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..

அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி நண்பகல் 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என அதன் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த குறிப்பிட்டுள்ளார். Read more

முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த தகவலை தமது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. அரசியல் சூழ்நிலை உட்பட பரஸ்பர நலன்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஸ்தாபிக்கப்பட்ட காஸா குழந்தைகள் நிதியத்திற்கான (Children of Gaza Fund) நிதி நன்கொடைகள் நேற்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன. கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் 1,589,000 ரூபாவையும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கிண்ணியா கிளை 5,300,000 ரூபாவையும், கல்முனை வலயக் கல்வி அலுவலகம் 3,128,500 ரூபாவையும், Sports First Foundation 300,000 ரூபாவையும் சிறுவர் நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளன.

Read more

விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதராக சாதனை படைத்த விண்வெளி வீரர் யூரி ககாரினின் 90 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் உள்ள ரஷ்ய கலாசார மையத்தில் விசேட நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யூரி ககாரின் தொடர்பான ஆவணப்படமும் திரையிடப்பட்டது. யூரி ககாரின் 1934ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் க்ளுஷினோ என்ற கிராமத்தில் பிறந்தார். Read more

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பின்போது, அமெரிக்க உதவியுடன் முன்னெடுக்கப்படும் பால் உற்பத்தியை நவீனமயப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read more