Header image alt text

சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கங்களின் வடக்கு மாகாண சம்மேளனத்தின் தலைவராக எமது கட்சியின் மன்னார் மாவட்ட செயலாளர் தோழர் ஜேம்ஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டு பதவியேற்றுள்ளார்.

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 6 April 2024
Posted in செய்திகள் 

யாழ் இணுவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.தேவராஜா நாகரத்தினம் (ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர், வலிகாமம் கல்வி வலயம்) அவர்கள் இன்று 2024.04.06 காலமானார். இவர் எமது கட்சியின் வலிதெற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் திருமுருகராஜன் மாஸ்டர் அவர்களின் அன்புத் தாயார் ஆவார்.

Read more

வவுனியா சேமமடு சண்முகானந்த வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளருமான க. சந்திரகுலசிங்கம் மோகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து நிகழ்வினை சிறப்பித்தபோது..,, Read more

பிரித்தானியா தமது பிரஜைகளுக்கான இலங்கைக்குரிய பயண ஆலோசனைகளை (Travel Advisory) புதுப்பித்துள்ளது. இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் காரணமாக, நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த பயண ஆலோனை புதுப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. அவசரகால மருத்துவச் சேவைகளுக்கான அணுகல், நாட்டிற்குள் நுழையும் போது பாதுகாப்புத் தேவைகள், வீதிப் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் சுகாதார வசதிகளுக்கான அணுகல் ஆகியவற்றின் தகவல்களை பிரித்தானிய புதுப்பித்துள்ளது. Read more

இலங்கையில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேராதனை பல்கலைக்கழக பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய இலங்கையில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை 57 இலட்சத்து 77 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி வருமானமின்மை தொழில் இன்மை மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு போன்றவை இதற்குக் காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.