Header image alt text

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மாணவர் என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒருவர் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை முடக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வட மாகாண மாநாடு இன்று  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இழக்கப்படுகின்ற கல்வி உரிமையை வென்றெடுப்பது எப்படி? எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் மண்டபம் ஒன்றில் இந்த மாநாடு இடம்பெற்றது. குறித்த மாநாட்டில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜெயசிங்க தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் நீடிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு இம்மாதம் 18ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக பதவி வகிப்பதை தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஏப்ரல் 18 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இடம்பெறுகின்ற இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி உள்ளிட்ட சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வை குழு, கடற்றொழில் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வை குழு, அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தலைமையில் அண்மையில் கூடியது. Read more