Header image alt text

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)யின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இன்று வவுனியா, கோவில்குளத்தில் பகல்வேளை நடைபெற்றது. கூட்டணியின் பொருளாளரான க. துளசி அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கூட்டணியின் இணைத்தலைவர்களும் ஏனைய நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். கூட்டணியின் மறைந்த செயலாளர் வே. நல்லநாதருக்கு பதிலாக நா. இரட்ணலிங்கம் அவர்கள் செயலாளராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

Read more

இன்று எமது கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் ஜுட்சன் அவர்களின் இல்லத்தில் கட்சியின் மகளிர் பிரிவு பிரதிநிதிகள், ஐந்து கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட கட்சி அமைப்பாளர்கள், கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான சந்திப்பு முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது கலைஞர் தவராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் பொருளாளரும் முன்னாள் வட மாகாண விவசாய அமைச்சருமான க.சிவநேசன் ( பவன்), கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யூட்சன், கட்சியின் கரைதுரைபற்று முன்னாள் தவிசாளர் தவராஜா மாஸ்டர், கட்சியின் மாவட்ட இளைஞர் பிரிவு பொறுப்பாளர் மயூரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read more

2028ஆம் ஆண்டளவில் கண்ணிவெடி மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகள் இல்லாத நாடாக இலங்கையை மாற்றவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் சுமார் 23 கிலோமீற்றர் நிலப்பரப்பிலே கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடமாகாணத்தில் கண்ணிவெடிகளை அகற்றுவதன் மூலம் பொதுமக்களின் எதிர்கால பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். Read more

முதன்முறையாக அரச வைத்தியசாலைகளில் குழந்தை பிரசவத்தின் போது பிரசவ அறையில் தந்தைமார்களை அனுமதிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக கொழும்பு – காசல் வீதியிலுள்ள மகளிர் வைத்தியசாலையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வைத்தியசாலையில் குழந்தை பிரசவத்திற்காக தனித்தனி அறைகள் காணப்படுகின்றமையினால் குழந்தையின் தந்தையும் பிரசவ அறைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Read more