Header image alt text

P.L.O.T.E மேதினங்கள்

P.L.O.T.E சுவிஸ்கிளை 2013 மேதினம்

சூரிச் 01.05.2013
மேதின அறிக்கை

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில்; சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் கலந்துகொண்ட தொழிலாளர் தினத்தில் தமிழீழமக்கள் விடுதலைக்கழக சுவிஸ்கிளையும் கலந்து கொண்டது. இதில்

தமிழினத்தின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வை இலங்கை அரசு காணவேண்டும் வெறும் பேச்சுவார்த்தையாக இருக்காமல் தீர்வாக இருக்கவேண்டும்.
அமைதியும், பாதுகாப்புமுள்ள சுதந்திரத்தை நாம் விரும்புகின்றோம்.
அரசியல் கைதிகளை இலங்கை அரசு மன்னிப்பு அளித்து விடுதலை செய்யவேண்டும்.
சர்வதேசமும் எமது அரசியல் தீர்வுக்கு தனது நியாயமான பங்களிப்பை செய்யவேண்டும். போரின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், உதவியும் கிடைக்கவேண்டும்.
வடகிழக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்படவேண்டும்.
தேவையற்ற இரானுவ முகாம்களை அகற்ற வேண்டும்.
மத ரீதியிலான ஆக்கிமிப்பு நிறுத்தப்படவேண்டும்.

“அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே’

போன்ற சுலோகங்கள் தங்கியவண்ணம் கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் த.ம.வி.க (P.L.O.T.E) சுவிஸ்கிளை சார்பாக கலந்து கொண்டார்கள்.

இவ் மேதின ஊர்வலமானது சூரிச் பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள Sihl Post (Lagerstrasse)ல் இருந்து ஆரம்பமாகி BürkliPlatz (Bellevuey) யில் முடிவடைந்தது.
இவ் மேதினத்தில் த.ம.வி.கழக (P.L.O.T.E)சுவிஸ் கிளையின் அழைப்பை ஏற்று கலந்து கொண்ட அனைவருக்கும் கழக சுவிஸ்கிளை தனது தோழமையான நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றது.
த.ம.வி.க சுவிஸ்கிளை
பிரச்சாரப்பிரிவு