Header image alt text

வவுனியா கோவில்புதுக்குளம் இந்துக்கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் மத்தியகுழு உறுப்பினர் தோழர் க. சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து நிகழ்வினை சிறப்பித்தபோது…. Read more

கடந்த 35 வருடமாக புனரமைப்புசெய்யப்படாமல் இருந்த வவுனியா கோவில்குளம் சங்கரப்பிள்ளை வீதி வவுனியா நகரசபை முன்னாள் உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா நகரசபை செயலாளர் அவர்களின் பாரிய முயட்சியியலும் துரித நடவடிக்கையில் இவ் வீதி புனரமைப்பு செய்யப்பட்டது.

Read more

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய ஐக்கிய மக்கள் கூட்டணியை நிறுவுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (05.04.2024) காலை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் பேராசிரியர் ஜி.எல். பீர்ஸ் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இன்று காலை கைச்சாத்திட்டுள்ளனர். இதன்படி சுதந்திர மக்கள் சபையின் 6 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்து தனித்தனியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளனர். Read more

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ, இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது அதனை வழமைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். உயர் தரத்தில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடத்தை கற்பதாக கூறும் மாணவர் ஒருவரினால் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் காணப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை வெளிப்படுத்துவதற்காகவே, இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் மற்றுமொரு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கும் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் இரண்டு தடவைகள் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன. முன்னதாக கடந்த 21ஆம் திகதியும் சந்திப்புபொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற சமுர்த்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் அரசியல் அன்றாடப் பிரச்சினை மற்றும் அபிவிருத்தி என்பவற்றை அரசியல் காலத்தில் முடிந்தவரை பெற்றுக் கொடுப்பதே தமது இலக்காக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். Read more