Header image alt text

முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் மீனவர் வாடிகள் சில தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். முல்லை – செம்மலை, நாயாறு பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் 8 வாடிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மீன்பிடிப்படகு ஒன்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பல இலட்சம் பெறுமதியான பொருட்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறியுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் வாடிகளுக்குள் சிறுவர்கள், பெண்கள் பலர் உறங்கிக் கொண்டிருந்ததுடன், தீ பரவுவதை அவதானித்தவுடன் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். Read more

எதிர்வரும் காலங்களில் அரச ஊழியர்களுக்கான புதிய ஊதியத் திட்டமொன்றைத் தயாரிப்பதாக நிதி அமைச்சினால் ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுபிற்பகல் ரயில்வே தொழிற்சங்கத்தினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அமைச்சர் மங்கள சமரவீர இது குறித்து தெரிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். Read more

புத்தளம் பிரதேசத்தில் கடல் பகுதியில் கரையொதுங்கியுள்ள மருத்துவ கழிவு பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ள வேண்டும் என்று கடலோர பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது.

புத்தளம் கடற்பகுதியில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக மருத்துவ கழிவு பொருட்கள் கரையொதுங்கியுள்ளதாக அந்த அதிகாரசபையின் பொது முகாமையாளர் டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார். Read more

யாழ். அச்சுவேலி வடக்குப் பகுதியில், நேற்றுமுன்தினம் இரவு, தனியார் பஸ் ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ மூட்டி எரிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி – யாழ்ப்பாணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் மீதே, இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

வடக்கு கிழக்கில் மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

ஏலவே 522 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக கோரப்பட்டிருந்த நிதியின் ஒரு பகுதி கிடைக்கப்பெற்றதுடன், எஞ்சிய பகுதிக்கான அனுமதி கடந்த வாரம் வழங்கப்பட்டது. முழுமையான நிதி கிடைக்கப்பெற்றதும் குறித்த காணிப் பரப்பு விடுவிக்கப்படும்.
Read more

மயிலிட்டி மீன்பிடித் துறைமுக மீள்கட்டுமானத் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் ஆரம்பித்து வைக்க உள்ளார். இராணுவ ஆக்கிரமிப்பில் நீண்டகாலமாக இருந்து வந்த, பழைமைவாய்ந்த மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம், அண்மையில் விடுவிக்கப்பட்டது.

வடக்கின் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்து மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

யாழ் சிறைச்சாலைக்கு மேலதிக கட்டிடங்களை கட்டுவதற்கு எதிராக யாழ்ப்பாண பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இன்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ் மாநகரசபையின் அங்கீகாரம் இல்லாமல், சட்டவிரோதமாக இந்த கட்டிடங்கள் கட்டப்படுவதாக, ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின்போது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனடிப்படையில் குறித்த நடவடிக்கைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும், இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உரிய தரப்புக்கு அனுப்பி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையின் கூரைமேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் சிறைக்கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் பாதுகாப்பாக கீழிறக்கி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

வெலிகடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவுக்குரிய சிறைக்காப்பாளரை (ஜெய்லர்) இடமாற்றம் செய்தமை தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்திய பெண் சிறைக்கைதிகள், அவரை மீண்டும் பணியில் அமர்த்துமாறு கோரியும், வெளியிருந்து சிறைக்கைதிகளுக்கு கொண்டுவரப்பட்ட உணவுகளை மட்டுப்படுத்துவதாக கூறப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். Read more

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியான ஈடுபாடு இல்லை என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தலை நடத்துவதற்கு பொது தீர்மானத்தை எடுக்கவில்லை எனவும் பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் உத்தியோகபூர்வ காலம் கடந்த வருடம் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் முடிவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

இலங்கைக்கான வெளிநாட்டு இராணுவ நிதித் திட்டத்தின் கீழ் 39 மில்லியன் டொலர் நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

அமெரிக்க காங்கிரஸின் அனுமதியின் கீழ் இந்த நிதி பயன்படுத்தப்படும் முறை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பின் அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது. Read more