Posted by plotenewseditor on 2 December 2023
Posted in செய்திகள்
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களை இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்திய பிரஜைகளாக அங்கீகரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.கரூர் – இரும்பூதிப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்த டி.கணேசன் என்பவர் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி G.R.சுவாமிநாதன், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது. Read more