வவுனியா நகர சபை தேசிய வாசிப்பு மாதமும் பரிசளிப்பு விழாவும் நகர சபை கலாசார மண்டபத்தில் திரு பூ செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக G.T லிங்கநாதன் முன்னாள் நகர பிதா முன்னால் மாகாண சபை உறுப்பினர், கௌரவ உறுப்பினர்களாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சோதிநாயகி மணிவண்ணன் அவர்களும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர் திருமதி டர்சனா சுகுமார் அவர்களும்,

கௌரவ விருந்தினராக தமிழ் அருவி சிவகுமாரன் அவர்களும், தமிழ்மணி மேழி குமரன் அவர்களும், ஆசிரிய ஆலோசகர் உதயகுமாரன் அவர்களும், சைவப்பிரகாசா கல்லூரியின் அதிபர் திருமதி ரமேஸ் அவர்களும், பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள், நகரசபை ஊழியர்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இதன் போது வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்திய போட்டியில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு வாசகர்களும் கௌரவிக்கப்பட்டனர் .
அதே போன்று 25 வருட காலமாக நூலகம் தலை நிமிர்ந்து நிற்க காரணமான திரு G.T லிங்கநாதன் அவர்கள் கல்வி சார் நல்லுள்ளங்கள் சார்பாகவும் சபை சார்பாகவும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் இந் நிகழ்வை முன்னிட்டு தமிழ்மணி மேழி குமரன் அவர்களால் நூலும் வெளியிடப்பட்டது.