Header image alt text

அரச வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை வங்கி ஊழியர்களின் தேசிய மாநாட்டில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.

புதிதாக 2600 கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். இதற்கான பரீட்சை நேற்று(02) நடத்தப்பட்டது. அதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.