Header image alt text

தோழர் நிசாந்தன் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாள் இன்று…..
அமரர் பொன்னுத்துரை அசோகன் (தோழர் நிசாந்தன் – அச்சுவேலி)
மலர்வு : 1967.04.10
உதிர்வு: 2018.12.04

எதிர்வரும் அனைத்து தேர்தலில் கட்புலனற்றோருக்கான விசேட வாக்குச் சீட்டுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தகைய நபர்களுக்காக அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நன்றி தலைவர் அவர்களே!
கௌரவ அமைச்சர் இந்த அமைச்சுப் பதவியை ஏற்கின்ற நேரத்திலே ஏறக்குறைய 70ற்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலையில் இருந்தார்கள். இன்று 14 கைதிகளாக மாறியிருக்கின்றது. இந்த அரசியல் கைதிகள் சம்பந்தமாக ஜனாதிபதி அவர்கள் தொடர்ந்து பல கலந்துரையாடல்களை நடத்தினார். அதிலே கௌரவ அமைச்சர் அவர்களும் கலந்து கொண்டிருந்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இருக்கின்ற இந்த அரசியல்கைதிகளை விடுவிக்க வேண்டுமென்ற ஒரு முடிவு அப்போது எடுக்கப்பட்டது. அந்தமுடிவை மிக ஆர்வத்துடனும், மனிதாபிமானத்துடனும் அணுகி இவர்கள் மிக விரைவாக விடுவிக்கப்பட வேண்டுமென்று நீதி அமைச்சர் அவர்கள் பாடுபட்டு அவர்களில் பலரை விடுவித்திருக்கின்றார்.

Read more

யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த​ போது 28 வயதான இளைஞரொருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய 04 பொலிஸ் உத்தியோகத்தர்களும் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு யாழ்.நீதவான் இன்று(04) உத்தரவிட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய 04 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அடையாள அணிவகுப்பிற்கு இன்று உட்படுத்த கடந்த தவணை வழக்கு விசாரணையின் போது உத்தரவிடப்பட்டிருந்தது. Read more