இரண்டு சொகுசு ரக பயணிகள் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன. குறித்த இரண்டு கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில், நங்கூரமிட்டுள்ளதாக துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதன்படி, 366 பயணிகளுடனும், 489 பணி குழாமினருடனும் வாஸ்கொடகாமா என்ற முதலாவது சொகுசு ரக சுற்றுலாப் பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அதேநேரம், எம்.எஸ் மயின் ஷிஃப் 5 என்ற இரண்டாவது சொகுசு ரக சுற்றுலாப் பயணிகள் கப்பல், 2365 சுற்றுலா பயணிகளுடனும், 967 அடங்கிய பணி குழாமினரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
10.12.1999இல் மன்னாரில் மரணித்த தோழர் டேவிட் (மரிசால் அந்தோனி – உயிர்த்தராசன்குளம்) அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
இன்று(10) சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டு இவ்வருடத்துடன் 75 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 1948 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைய ஆண்டு தோறும் டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம், நீதி’ எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டுக்கான மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.