இன சமத்துவம் மற்றும் நீதிக்கான அமெரிக்காவின் விசேட பிரதிநிதியான டீசிரி கோமியர் ஸ்மித் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். இன்றைய தினம் வருகைத்தரும் அவர் ஒருவார காலம் நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த காலப்பகுதியில் கொழும்பு நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார். மனித உரிமைகள் மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காகவும் அமெரிக்க அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதற்காகவும் அவர் இலங்கையின் பல்வேறு சமூகங்களுடன் கலந்துரையாடவுள்ளார். மலையக தமிழர்கள் சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் முக்கியமான சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.