வவுனியாவில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் வடக்கு இளைஞர் முன்னெடுப்பு அமைப்பின் தலைவர் சுந்தரலிங்கம் காண்டீபன் தலைமையில் தேசிய இளைஞர் மாநாடு..!
…இளைஞர் பிரகடனமும் வெளியிடப்பட்டது…
வடக்கு இளைஞர் முன்னெடுப்பு அமைப்பின் ஒழுங்கமைப்பில் இனங்களுக்கிடையிலான மதங்களுக்கிடையிலான நம்பிக்கை மற்றும் ஐக்கியத்தினை கட்டியெழுப்புவதற்கான இளைஞர் முன்மொழிவுகள் தொடர்பான மிகப் பிரமாண்டமான இளைஞர் மாநாடு அதன் தலைவர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் தலைமையில் வவுனியா நகரசபையின் நகர மண்டபத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வானது 300இற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளோடு வவுனியா மன்னார் முல்லைத்தீவைச் சேர்ந்த இளைஞர் பிரதிநிதிகளோடு வன்னி தேர்தல் தொகுதிக்கான இளைஞர் மாநாடாகவும் எதிர்காலத்தில் இளைஞர்களுடைய செயற்பாடுகள் இந்த அமைப்பினுடைய செயற்பாடுகள் தொடர்பான விளக்கங்களோடு இந்த மாநாடு ஒழுங்குபடுத்தப்பட்டது.
இவ் இளைஞர் மாநாட்டில் அரசியல் கட்சிகளினுடைய பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தார்கள். அந்த வகையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும்,
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) மத்தியகுழு உறுப்பினரும் முன்னைநாள் வவுனியா நகரசபைஉபநகரபிதாவுமான சந்திரகுலசிங்கம் மோகன் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் பரமேஸ்வரன் பாபு,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையினுடைய முன்னாள் தவிசாளர் த.யோகராசா அதே போன்று தமிழீழ விடுதலை இயக்கம் சார்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் அதே போன்று ஸ்ரீரெலோ அமைப்பின் சார்பாக அதனுடைய வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையினுடைய முன்னாள் உறுப்பினர் குமார் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் அதன் பிரதிநிதி பார்த்தீபன் அவர்கள்
மற்றும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் மஞ்சு அவர்கள் புதிய மாக்சிச லெனின் கட்சியினுடைய வவுனியா மாவட்ட அமைப்பாளர் பிரதீபன் அவர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இளைஞர் யுவதிகள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.