Header image alt text

13.12.2006இல் மரணித்த தோழர் சேகர் (சீனித்தம்பி பேரின்பநாயகம்) அவர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்று..

2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் திருத்தங்களுடன்  41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் அளிக்கப்பட்டன.  2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மாத காலமாக இடம்பெற்று வந்த நிலையில்,  மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று (13) இடம்பெற்றது.  கடந்த நவம்பர் 13 ஆம் திகதி, நிதி அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. Read more

இலங்கை மக்களின் அமைதியான ஜனநாயக, பொருளாதார அபிலாஷைகளுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பை தெரிவிக்கும் யோசனையொன்று, அந்நாட்டின் சர்வதேசத் தொடர்புகள் பற்றிய குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க செனட் சபை உறுப்பினரான பென் காடின் (Ben Cardin), செனட் சபையின் சர்வதேசத் தொடர்புகள் பற்றிய குழுவின் தலைவரும் தரப்படுத்தல் உறுப்பினருமான ஜிம் ரீஷ் (Jim Risch), அதன் பிரதிநிதியான ராஜா கிருஷ்ணமூர்த்தி (Raja Krishnamoorthi) மற்றும் பில் ஜோன்சன் (Bill Johnson) ஆகியோர் இந்த யோசனையை முன்வைத்துள்ளனர். Read more

மன்னார் இறங்குதுறையை அபிவிருத்தி செய்வதற்காக உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. மன்னார் மற்றும் இராமேஷ்வரத்திற்கு இடையில் பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு இந்த இறங்குதுறை விரைவாக அபிவிருத்தி செய்யப்படும் என அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ்.ருவன்சந்திர குறிப்பிட்டார். அண்மையில் மன்னார் இறங்குதுறையை சூழவுள்ள பகுதியை துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டது. Read more