ஆசிரியர், அதிபர் இடமாற்றங்களில் பாரபட்சத்திற்கு இடமளிக்க முடியாது என ஆசிரியர், அதிபர் சங்கங்களுக்கு வட மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார். வட மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, இடமாற்றங்கள் வழங்கப்படாமை, அதிபர் நியமனங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம், வட மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர் P.S.M.சார்ள்ஸை தனித்தனியாக சந்தித்து கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்புகள் இடம்பெற்றன. Read more
ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை மீண்டும் தெரிவு செய்ய கட்சியின் விசேட சம்மேளனத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் கட்சியின் சம்மேளன கூட்டம் இன்று (15) மாலை இடம்பெற்றது. கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இந்த சம்மேளன கூட்டம் நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் இந்த கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.