Posted by plotenewseditor on 16 December 2023
Posted in செய்திகள்
இலங்கை கடற்பிராந்தியத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள வரும் சீன கப்பலுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என இந்தியா இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சீன ஆய்வுக் கப்பலான Xiang Yang Hong 03 கப்பல் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் மே மாதம் இறுதி வரை தென்னிந்திய கடற்பரப்பில் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளது. இலங்கை மற்றும் மாலைத்தீவுகளின் கடற்பரப்புகளும் அதில் அடங்குகின்றன. இலங்கையிடமும் மாலைத்தீவுகளிடமும் தமது கப்பலின் ஆய்வு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குமாறு சீனா கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read more