Header image alt text

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த இன்று கைது செய்யப்பட்டிருந்தார். Read more

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற ஹியுமன் இமியூனோகுளோபியூலின் மருந்து கொடுக்கல் – வாங்கல் தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று(18) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரான நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மருந்தை சுகாதார அமைச்சுக்கு வழங்கியதாக கூறப்படும் நிறுவனத்தின் உரிமையாளர், மருந்து விநியோக பிரிவின் முன்னாள் பணிப்பாளர், வைத்தியர் கபில விக்ரமநாயக்க உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படடுள்ளனர். Read more