சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற ஹியுமன் இமியூனோகுளோபியூலின் மருந்து கொடுக்கல் – வாங்கல் தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று(18) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரான நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மருந்தை சுகாதார அமைச்சுக்கு வழங்கியதாக கூறப்படும் நிறுவனத்தின் உரிமையாளர், மருந்து விநியோக பிரிவின் முன்னாள் பணிப்பாளர், வைத்தியர் கபில விக்ரமநாயக்க உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படடுள்ளனர்.சர்ச்சைக்குரிய மருந்தை போலியாக தயாரித்துள்ளதாக நீதிமன்றத்தில் வௌிக்கொணரப்பட்டதுடன், அதனை நாட்டின் சுமார் 2000 நோயாளர்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.