முத்தையன் கட்டு இடதுகரை ஜீவநகரைச் சேர்ந்த செல்வி அழகர்சாமி வையாலினி என்கிற
வறிய பாடசாலை மாணவிக்கு உதவும் முகமாக ஜெர்மனியில் வசிக்கும் செல்வி சிவகுமாரன் கோபிகா அவர்கள் தனது பிறந்த தினமாகிய இன்று பாடசாலை செல்வதற்காக துவிச்சக்கர வண்டி அன்பளிப்பாக வழங்கியுள்ளார். உதவி வழங்கும் நிகழ்வில் எமது கட்சியின் பொருளாளர் க. சிவநேசன், கட்சியின் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் இரா. தயாபரன், கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யூட்சன், கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் க. சிவலிங்கம் மாஸ்டர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

செல்வி சிவகுமாரன் கோபிகா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்..,