வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கனகேஸ்வரன் மன்னார் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 1998 முதல் 2003 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆசிரியராகப் பணியாற்றிய அவர், 2003 முதல் 2004ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் வரை நிர்வாக சேவைக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர், 2004 ஒக்டோபர் முதல் 2015ஆம் ஆண்டு மே மாதம் வரையில் தொழில் திணைக்களத்தின் பிரதி தொழில் ஆணையாளராக அவர் பணியாற்றியுள்ளார். Read more
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட அந்நாட்டின் சிரேஷ்ட இராஜதந்திரியான ஶ்ரீ சந்தோஷ் ஜா கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்த சிரேஷ்ட இராஜதந்திரியான ஶ்ரீ சந்தோஷ் ஜா, கடமைகளை பொறுப்பேற்றதாக இலங்கைக்கான இந்திய தூதரம் தமது X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. ஶ்ரீ சந்தோஷ் ஜா இதற்கு முன்னர் பெல்ஜியத்திற்கான இந்திய தூதுவராக கடமையாற்றியுள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவிற்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.