2023 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை இன்று வழங்கப்பட்டது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு 39 நாட்கள் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த பாடசாலை விடுமுறை காலப்பகுதியில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. Read more
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சில அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்வி அமைச்சின் செயலாளராக செயற்பட்ட எம். என். ரணசிங்க, நீதி சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளராக பெயரிடப்பட்டுள்ளார். கல்வி அமைச்சின் செயலாளர் பொறுப்பு வசந்தா பெரேராவிற்கு கிட்டியுள்ளது. வனவிலங்கு மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக குணதாச சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக ஏ.சீ. மொஹமட் நஃபீல் அமர்த்தப்பட்டுள்ளார்.