ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சில அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  கல்வி அமைச்சின் செயலாளராக செயற்பட்ட எம். என். ரணசிங்க,  நீதி சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளராக பெயரிடப்பட்டுள்ளார். கல்வி அமைச்சின் செயலாளர் பொறுப்பு வசந்தா பெரேராவிற்கு கிட்டியுள்ளது. வனவிலங்கு மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சின்  செயலாளராக குணதாச சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.  நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக ஏ.சீ. மொஹமட் நஃபீல் அமர்த்தப்பட்டுள்ளார்.

அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளராக ப்ரதீப் யசரத்னவும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராக சமன் தர்ஷன பண்டிகோரளவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

சுற்றாடல் அமைச்சின் செயலாளராக பீ.கே.பீ. சந்ரகீர்த்தியும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளராக கலாநிதி சுலக் ஷன ஜயவர்தனவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலலாளராக பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்கவும் தொழிநுட்ப அமைச்சின் செயலாளராக கலாநிதி தர்மஸ்ரீ குமாரதுங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதியினால் சில மாகாண சபைகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடமத்திய மாகாண பிரதம செயலாளராக ஆர்.எம்.டபிள்யூ. எஸ். சமரதிவாகரவும் மேல் மாகாண பிரதம செயலாளராக எஸ்.எல்.டீ.கே விஜேசிங்கவும் நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.