கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையில் கடந்த ஏழு வருடங்களின் பின்னர் அகிலன் அகஷ் என்ற மாணவன் தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 175 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தமையை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் (பா.உ)கலந்து கொண்டபோது Read more
அரச மாடிக்குடியிருப்பு வீடுகளின் உரிமத்தை மக்களுக்கு வழங்கும் கொள்கை ரீதியான தீர்மானத்தை துரிதப்படுத்த வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் தலைவருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அது தொடர்பிலான பிரச்சினைகளை நிவர்த்திக்கும் நோக்கில் விரைவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். காணி உரிமம் வாயிலாக மக்களுக்கு அரச மாடிக்குடியிருப்பு வீட்டு உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று(22) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே சாகல ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
நாளையும் நாளை மறுதினமும் பொலிஸாருடன் இணைந்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த 2 நாட்களிலும் கைதிகளை பார்வையிட அதிகளவானோர் வரக்கூடும் என்பதால் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவினால் அனைத்து சிறைச்சாலை அத்தியட்சகர்களுக்கும் உரிய பணிப்புரை விடுத்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ திஸாநாயக்க தெரிவித்தார். நாளையும் நத்தார் பண்டிகையான நாளைமறுதினமும் சிறை கைதிகளை உறவினர்கள் பார்வையிட வாய்ப்பளிக்க சந்தர்ப்பமளிக்கப்படவுள்ளது.