நத்தார் பண்டிகையை முன்னிட்டு 1,004 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. 15 பெண் கைதிகளும் 989 ஆண் கைதிகளும் அதில் அடங்குகின்றனர். அதற்கமைய, பல்லேகல சிறைச்சாலையிலிருந்து 162 கைதிகளும் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து 78 கைதிகளும் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து 42 கைதிகளும் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர். நாட்டின் சகல சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய வகையில் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் நாளை(25) விடுதலை செய்யப்படவுள்ளனர்.