Header image alt text

கொவிட் – 19 வைரஸின் ‘JN-1’ என்ற உப திரிபினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் மிகக்குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இலங்கையில் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொவிட் – 19 வைரஸின் ‘JN-1’ என்ற உப திரிபின் அபாயத்தை மதிப்பிடுவதற்கு மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அதன்படி அந்த நிறுவனம் ஏற்கனவே பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

நத்தார் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதிகள் இன்று(25) விடுதலை செய்யப்பட்டனர். நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 1,004 சிறைக்கைதிகள் இன்று(25) விடுவிக்கப்படுகின்றனர்.  அதனடிப்படையில், வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து 23 கைதிகள் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையில் விடுதலை செய்யப்பட்டனர். சிறு குற்றங்களை புரிந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.