Header image alt text

26.12.2005இல் இறம்பைக்குளத்தில் மரணித்த தோழர் சர்ச்சில் (திருப்பதி மாஸ்டர்- வீரப்பன் திருப்பதி- சமயபுரம்) அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

சுனாமி ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 19ம் ஆண்டு நினைவு நாள்.
இலங்கையில் முதலாவதாக நிறுவப்பெற்ற பூந்தோட்டம் சுனாமி நினைவு தூபியில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் மரணித்த அத்தனை உறவுகளின் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்தித்த போது.

Read more

ஈர விழிகளுடன் நினைவுகூருகின்றோம்!
ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 19 ஆண்டுகள் நிறைவு-
சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம்திகதி ஏற்பட்ட சுனாமிப்பேரலை காரணமாக இலங்கையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகளின் ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 9.0 ரிச்டர் அளவில் பதிவாகியதுடன், இந்தப் பூமியதிர்ச்சி கடலில் நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் அசுர அலைகளை உருவாக்கியது.

Read more

எமது கட்சி உறுப்பினரும் வவுனியா சின்னபுதுக்குளம் வெளிக்குளம் வட்டார இணைப்பாளருமாகிய சிறிஸ்கந்தராஜா அருணன் அவர்கள் அகில இலங்கை சமாதான நீதவானாக நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அண்மையில் உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர். டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 23 ஆம் திகதி உயிரிழந்தார். குறித்த மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே அவர் மரணித்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து உயிரிழந்த மாணவியின் உறவினர்கள், தெல்லிப்பழை காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர். Read more

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர்(CID) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று(260 காலை 9 மணி முதல் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனிடையே, சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. Read more