வட மாகாணத்தில் அண்மையில் வழங்கப்பட்ட அதிபர் சேவைகள் நியமனத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து இலங்கை அதிபர் சேவை சங்கத்தினால் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமக்கான நியமனம் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும் எனவும், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அதற்கான நிவாரணத்தை பெற்றுத்தர வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் தலைவர் சிரச ஆரியவர்த்தன தலைமையில், வட மாகாணத்தின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிபர் சேவை தரத்திற்கு உள்வாங்கப்பட்ட அதிபர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, 8 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.