Header image alt text

நாட்டில் மற்றுமொரு கொவிட் மரணம் பதிவாகியுள்ளது. கம்பஹா போதனா வைத்தியசாலையில் இந்த கொவிட் மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்குள் பதிவான இரண்டாவது கொவிட் மரணம் இதுவாகும். இதேவேளை, இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 702 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 06 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகம், கேரளம், மேற்கு வங்கம் மற்றும் புதுடெல்லி பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். Read more

28.12.1991இல் பெரியபோரதீவில் மரணித்த தோழர் செல்வம் (சவரியான் குரூஸ் – தாழ்வுபாடு) அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக நீதிபதி W.M.N.P.நீல் இத்தவெல நியமிக்கப்பட்டுள்ளார். ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சைத்ய குணசேகர மற்றும் பர்னார்ட் ராஜபக்ஸ ஆகியோர் இந்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.