நாட்டில் மற்றுமொரு கொவிட் மரணம் பதிவாகியுள்ளது. கம்பஹா போதனா வைத்தியசாலையில் இந்த கொவிட் மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்குள் பதிவான இரண்டாவது கொவிட் மரணம் இதுவாகும். இதேவேளை, இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 702 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 06 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகம், கேரளம், மேற்கு வங்கம் மற்றும் புதுடெல்லி பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில், இந்தியாவில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.