Posted by plotenewseditor on 29 December 2023
Posted in செய்திகள்
ஸ்ரீலங்கன் விமான நிறுவன கொள்வனவு தொடர்பாக முதலீட்டாளர்களின் யோசனையை பொற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் இரண்டாவது தடவையாகவும் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து , விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் K.D.S.ருவன்சந்த்ர தெரிவித்துள்ளார். முன்னதாக, டிசம்பர் மாதத்துடன் நிறைவடையவிருந்த கால அவகாசம், ஜனவரி 08 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது. பலருக்கு வாய்ப்பளிக்கும் வகையில், முதலீட்டாளர்களிடமிருந்து யோசனைகளை பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.