இவ் ஆண்டின் சிறந்த சன சமூகநிலையத்திற்கான விருதையும் சனசமூக நிலையங்களுக்கிடையிலான மதிப்பீட்டில் புள்ளி அடிப்படையில் முதலாம் இடத்தையும் சமூக ஆர்வலர் இரத்தினசிங்கம் கெங்காதரன் தலைமையிலான ஸ்ரீ துர்க்கா சனசமூக நிலையம் பெற்றுக்கொண்டுள்ளது. மீள் குடியேற்றம் செய்யப்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்குப் பிரதேசத்தில் யுத்தத்தால் சேதமடைந்தது முற்று முழுதாக அழிவுற்ற ஒரு சன சமூக நிலையம் மீள் எழுச்சி பெற்று இன்று முதலாம் இடத்தைப் பெற்று சிறந்த சனசமூக நிலையத்திற்கான விருதையும் பெற்றுள்ளமையானது அந்த நிலையத்தின் சிறந்த தலைமைத்துவத்திற்கும் உறுப்பினர்களின் ஒற்றுமைக்கும் கிடைத்த பரிசாகும் என இவ் விருது விழாவில் பிரதம அதிதியால் பராட்டி மெச்சுரையும் வழங்கப்பட்டது.