26.12.2023 செவ்வாய்க்கிழமை பிரான்ஸில் காலமான ஜோன் பப்ரிஸ்ட் பாலகுமார் (மல்லாவி) அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்ப உறவுகளோடு, நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொள்கிறோம்.Posted by plotenewseditor on 30 December 2023
Posted in செய்திகள்
26.12.2023 செவ்வாய்க்கிழமை பிரான்ஸில் காலமான ஜோன் பப்ரிஸ்ட் பாலகுமார் (மல்லாவி) அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்ப உறவுகளோடு, நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொள்கிறோம்.Posted by plotenewseditor on 30 December 2023
Posted in செய்திகள்
வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளி மாணவர்களின் கலைவிழாவும் மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இன்று 12.30.2023 பாடசாலை ஆசிரியரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்தியகுழு உறுப்பினரும், முன்னாள் வவுனியா நகரசபை உப தலைவரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான தோழர் க.சந்திரகுலசிங்கம் மோகன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் தேசிய அமைப்பாளர் தோழர் பீட்டர், முன்னாள் நகரசபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் தொழிச்சங்க பிரிவு பொறுப்பாளருமான தோழர் காண்டீபன்,Posted by plotenewseditor on 30 December 2023
Posted in செய்திகள்
இலங்கையில் பெருந்தோட்ட தொழில்துறையை நிறுவிய இந்திய வம்வாவளி தமிழர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா நினைவு அஞ்சல் முத்திரையை வெளியிடவுள்ளார். இந்தியாவின் புதுடெல்லியில் இதற்கான நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. இலங்கையின் சார்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் குறித்த முத்திரையை பெற்றுக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை இந்தியாவின் ‘நாகரிக இரட்டையர்’ என இந்திய பிரதமர் நரேந்திர மோடி நம்புவதாக பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 30 December 2023
Posted in செய்திகள்
கொரோனா தொற்று உள்ளிட்ட நோய்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிகிச்சைகளுக்காக நாளாந்தம் வைத்தியசாலைகளுக்கு வருகைத்தரும் நோயாளர்களின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தற்போது பரவி வரும் நோய்நிலைமைகளில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக பொது மக்கள் முகக்கவசங்களை அணிதல் மற்றும் கொரோனா தொற்று காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம் எனவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.