வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளி மாணவர்களின் கலைவிழாவும் மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இன்று 12.30.2023 பாடசாலை ஆசிரியரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்தியகுழு உறுப்பினரும், முன்னாள் வவுனியா நகரசபை உப தலைவரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான தோழர் க.சந்திரகுலசிங்கம் மோகன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் தேசிய அமைப்பாளர் தோழர் பீட்டர், முன்னாள் நகரசபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் தொழிச்சங்க பிரிவு பொறுப்பாளருமான தோழர் காண்டீபன்,
கௌரவ விருந்தினராக திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் , சனசமூக நிலைய தலைவர் , மாதர்சங்க தலைவி, முன்பள்ளி பொறுப்பாசிரியர், சமூக குடுப்ப நல உத்தியோகத்தர் மற்றும் பெற்றோர்கள் முன்பள்ளி பழைய மாணவர்கள் பாடசாலை நலன் விரும்பிகள் மாணவர்கள் கலந்துகொண்டு கலை நிகழ்வுகளும் கௌரவிப்பு நிகழ்வுகளும் வெகு சிறப்பாக நடைபெற்றன.

