
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகட்டும். பொருளாதார வீழ்ச்சி, உணவுப் பாதுகாப்பின்மை, அதிகரிக்கும் போதைப் பொருள் பாவனை, எங்கும் எதிலும் நிறைந்துள்ள ஊழல், பலாத்காரமான முறையிலான பௌத்த மயமாக்கல் என அனைத்து கேடுகளுக்கும் முகம் கொடுத்து அதிலிருந்து மீண்டு வரவேண்டும் என்று உறுதியெடுத்துக் கொள்ளும் வேளையில் புதிய ஆண்டில் நுழைகின்றோம்.ஒரு சமூகமாய், தேசிய இனமாய் நாம் முகம் கொடுக்கும் அத்தனை சவால்களையும் வெற்றிகொள்ளும் செயற்பாடுகளை மலரும் புத்தாண்டில் ஒற்றுமையான, நீண்டு நிலைத்திருக்கக்கூடிய செயற்பாடுகளால் வலிமை பெறச் செய்திடுவோம்.
சிறார்களைப் பேணுவோம். பெண்களைப் போற்றுவோம். இளைஞர்களை வலுப்படுத்துவோம். முதியோர்களை அரவணைப்போம். புதிதாய் சிந்திப்போம். புத்துணர்வுடன் செயற்படுவோம். ஒற்றுமையாய் முன் செல்வோம். அறிவார்ந்த, ஆரோக்கியமான சமூகத்திற்காய் அதன் விடிவுக்காய் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திடுவோம்.
ஊடகப் பிரிவு
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்