புதிதாக 2600 கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். இதற்கான பரீட்சை நேற்று(02) நடத்தப்பட்டது. அதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா நகர சபை தேசிய வாசிப்பு மாதமும் பரிசளிப்பு விழாவும் நகர சபை கலாசார மண்டபத்தில் திரு பூ செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக G.T லிங்கநாதன் முன்னாள் நகர பிதா முன்னால் மாகாண சபை உறுப்பினர், கௌரவ உறுப்பினர்களாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சோதிநாயகி மணிவண்ணன் அவர்களும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர் திருமதி டர்சனா சுகுமார் அவர்களும்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச தலைவர்கள் சிலரை இன்று (02) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் நடைபெறும் COP 28 எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ள நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த கலந்துரையாடல்களில் பங்கேற்றுள்ளார். இதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனை இன்று சந்தித்துள்ளார். இதன்போது, இரு அரச தலைவர்களும் இருதரப்பு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களை இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்திய பிரஜைகளாக அங்கீகரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.கரூர் – இரும்பூதிப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்த டி.கணேசன் என்பவர் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி G.R.சுவாமிநாதன், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.
01.12.1990இல் மரணித்த தோழர் அருணாசலம் சேகர் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
தரமற்ற இம்யூனோ குளோப்ளின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்ரகுப்தாவிடம் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அவரிடம் சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடனளிக்கும் நாடுகளுடன் இலங்கை ஏற்படுத்திக்கொண்ட கொள்கை ரீதியான உடன்படிக்கையை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளது. இலங்கையின் பிணை எடுப்பு தொடர்பான முதல் மதிப்பாய்வை அடுத்த மாதத்தில் பரிசீலிப்பதற்கு இது வழிவகுத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியுடன் சுமார் 4.2 பில்லியன் டொலர் கடன் தொடர்பில் இலங்கை ஏற்கனவே உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. இந்தநிலையில் ஒரு மாதத்திற்குப் பிறகு பெரிஸ் க்ளப்பின் இணை தலைமை நாடுகளின் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.