Header image alt text

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு செலுத்தப்பட்ட மருந்தினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக மருத்துவ பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்றுவந்த 25 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்தார். காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்தார். இந்தநிலையில், மாணவியின் மரணம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றது. Read more

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 1,004 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. 15 பெண் கைதிகளும் 989 ஆண் கைதிகளும் அதில் அடங்குகின்றனர். அதற்கமைய, பல்லேகல சிறைச்சாலையிலிருந்து 162 கைதிகளும் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து 78 கைதிகளும் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து 42 கைதிகளும் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.  நாட்டின் சகல சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய வகையில் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் நாளை(25) விடுதலை செய்யப்படவுள்ளனர்.

கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையில் கடந்த ஏழு வருடங்களின் பின்னர் அகிலன் அகஷ் என்ற மாணவன் தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 175 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தமையை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் (பா.உ)கலந்து கொண்டபோது Read more

அரச மாடிக்குடியிருப்பு வீடுகளின் உரிமத்தை மக்களுக்கு வழங்கும் கொள்கை ரீதியான தீர்மானத்தை துரிதப்படுத்த வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் தலைவருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அது தொடர்பிலான பிரச்சினைகளை நிவர்த்திக்கும் நோக்கில் விரைவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். காணி உரிமம் வாயிலாக மக்களுக்கு அரச மாடிக்குடியிருப்பு வீட்டு உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று(22) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே சாகல ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். Read more

நாளையும் நாளை மறுதினமும் பொலிஸாருடன் இணைந்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த 2 நாட்களிலும் கைதிகளை பார்வையிட அதிகளவானோர் வரக்கூடும் என்பதால் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவினால் அனைத்து சிறைச்சாலை அத்தியட்சகர்களுக்கும் உரிய பணிப்புரை விடுத்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ திஸாநாயக்க தெரிவித்தார். நாளையும்  நத்தார் பண்டிகையான நாளைமறுதினமும் சிறை கைதிகளை உறவினர்கள் பார்வையிட வாய்ப்பளிக்க சந்தர்ப்பமளிக்கப்படவுள்ளது.

Read more

2023 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை இன்று வழங்கப்பட்டது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு 39 நாட்கள் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.  இந்த பாடசாலை விடுமுறை காலப்பகுதியில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. Read more

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சில அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  கல்வி அமைச்சின் செயலாளராக செயற்பட்ட எம். என். ரணசிங்க,  நீதி சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளராக பெயரிடப்பட்டுள்ளார். கல்வி அமைச்சின் செயலாளர் பொறுப்பு வசந்தா பெரேராவிற்கு கிட்டியுள்ளது. வனவிலங்கு மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சின்  செயலாளராக குணதாச சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.  நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக ஏ.சீ. மொஹமட் நஃபீல் அமர்த்தப்பட்டுள்ளார். Read more

வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கனகேஸ்வரன் மன்னார் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 1998 முதல் 2003 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆசிரியராகப் பணியாற்றிய அவர், 2003 முதல் 2004ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் வரை நிர்வாக சேவைக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர், 2004 ஒக்டோபர் முதல் 2015ஆம் ஆண்டு மே மாதம் வரையில் தொழில் திணைக்களத்தின் பிரதி தொழில் ஆணையாளராக அவர் பணியாற்றியுள்ளார். Read more

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட அந்நாட்டின் சிரேஷ்ட இராஜதந்திரியான ஶ்ரீ சந்தோஷ் ஜா​ கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்த சிரேஷ்ட இராஜதந்திரியான ஶ்ரீ சந்தோஷ் ஜா, கடமைகளை பொறுப்பேற்றதாக இலங்கைக்கான இந்திய தூதரம் தமது X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. ஶ்ரீ சந்தோஷ் ஜா இதற்கு முன்னர் பெல்ஜியத்திற்கான இந்திய தூதுவராக கடமையாற்றியுள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவிற்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமரர் தோழர் முருகேசு நெல்சன்
மலர்வு :1981.09.06
உதிர்வு : 1999.12.20