கடந்த வருடம் முதல் இதுவரையான காலப்பகுதியில் விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட 1500-இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் எதிர்பார்ப்பில் காத்திருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். நாட்டிலுள்ள 40 சிறிய வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மியன்மாரில் தாய்லாந்து எல்லை அருகே பயங்கரவாத குழுவொன்றின் சைபர் அடிமைகளாக பலவந்தமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கை இளைஞர்கள் ஐவர் தப்பியுள்ளனர். மியன்மார் – தாய்லாந்து எல்லையில் உள்ள குறித்த பகுதி கூகுள் வரைபடத்தில் ‘Cybercriminal Area’ எனப்படும் சைபர் குற்றப் பிரதேசமாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மியன்மாரின் மியாவெட்டி நகரில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள குறித்த பிரதேசம் முழுமையாக பயங்கரவாத குழுவொன்றின் கட்டுப்பாட்டில் உள்ளது. தாய்லாந்தில் கணினி துறையில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதாகக்கூறி அழைத்துச் செல்லப்பட்ட 50-க்கும் மேற்பட்ட இலங்கையின் இளைஞர், யுவதிகள் தொடர்ந்தும் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
முத்தையன் கட்டு இடதுகரை ஜீவநகரைச் சேர்ந்த செல்வி அழகர்சாமி வையாலினி என்கிற
19.12.1990இல் மரணித்த தோழர் சந்திரன் (க.விவேகராசா) அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவன் உள்ளிட்ட நான்கு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை இன்று (19) வாழைச்சேனை நீதிமன்றில் இடம்பெற்ற போது பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைவாக, வாழைச்சேனை பொலிஸாரினால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வாழைச்சேனை நீதவான் M.I.M.ரிஸ்வான் சந்தேகநபர்கள் நால்வருக்கும் பிணை வழங்கினார்.
சிறப்பு பிரிவு கைதிகளை ஏற்றிச்செல்லும் சிறைச்சாலை பஸ்களில் CCTV கெமராக்களைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் நோக்கில் பஸ்களில் இவ்வாறு CCTV கெமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி B திசாநாயக்க தெரிவித்தார்.. சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் வௌியில் அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் இதனூடாக கண்காணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த இன்று கைது செய்யப்பட்டிருந்தார்.
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற ஹியுமன் இமியூனோகுளோபியூலின் மருந்து கொடுக்கல் – வாங்கல் தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று(18) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரான நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மருந்தை சுகாதார அமைச்சுக்கு வழங்கியதாக கூறப்படும் நிறுவனத்தின் உரிமையாளர், மருந்து விநியோக பிரிவின் முன்னாள் பணிப்பாளர், வைத்தியர் கபில விக்ரமநாயக்க உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படடுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்துடன்(IMF) முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் போது பொறுப்புடன் செயற்படுமாறு, அனைத்து அரசியல் தலைவர்களிடமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். கண்டி மாநகர சபையின் “கரலிய அரங்கம்” மற்றும் கலைக்கூடம் என்பவற்றை திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இன்று(17) கலந்து கொண்டார். கண்டி மாநகர சபையினால் 2018 ஆம் ஆண்டு இதற்கான நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், இதற்காக மாநகர சபையினால் 600 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் கட்டாயம் நடத்தப்படும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் படிஇ கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை எவ்வித கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவில்லை.