Header image alt text

துயர் பகிர்வு-

Posted by plotenewseditor on 16 December 2023
Posted in செய்திகள் 

சுழிபுரம் நெல்லியானைச் சேர்ந்தவரும் தேனீ முகாம் தோழர் யாதவனின்(தயாபரன், மூளாய், சுழிபுரம்) பாரியாருமான தயாபரன் மான்விழி அவர்கள் மூளாயில் இன்று காலமாகிவிட்டார். அவருக்கு அஞ்சலிகளை செலுத்துவதோடு தோழர் யாதவனுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

வருமான அனுமதிப்பத்திரத்தை கொண்டிராத வாகனங்கள் தொடர்பான தகவல்களை திரட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 05 வருடங்களுக்கு அதிகக் காலம் வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளாத வாகனங்கள் தொடர்பில் அனைத்து மாகாண சபைகளிடமிருந்தும் தகவல்களை கோரியுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்தார். அந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு வாகன உரிமையாளர்களுக்கு அது தொடர்பில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார். Read more

இலங்கை கடற்பிராந்தியத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள வரும் சீன கப்பலுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என இந்தியா இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சீன ஆய்வுக் கப்பலான  Xiang Yang Hong 03 கப்பல் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் மே மாதம் இறுதி வரை   தென்னிந்திய கடற்பரப்பில் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளது. இலங்கை மற்றும் மாலைத்தீவுகளின்  கடற்பரப்புகளும் அதில் அடங்குகின்றன. இலங்கையிடமும் மாலைத்தீவுகளிடமும் தமது கப்பலின் ஆய்வு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குமாறு சீனா கோரிக்கை விடுத்துள்ளதாக   ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read more

ஆசிரியர், அதிபர் இடமாற்றங்களில் பாரபட்சத்திற்கு இடமளிக்க முடியாது என ஆசிரியர், அதிபர் சங்கங்களுக்கு வட மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.  வட மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, இடமாற்றங்கள் வழங்கப்படாமை, அதிபர் நியமனங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம், வட மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர் P.S.M.சார்ள்ஸை தனித்தனியாக சந்தித்து கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.  யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்புகள் இடம்பெற்றன. Read more

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை மீண்டும் தெரிவு செய்ய கட்சியின் விசேட சம்மேளனத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் கட்சியின் சம்மேளன கூட்டம் இன்று (15) மாலை இடம்பெற்றது. கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இந்த சம்மேளன கூட்டம் நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் இந்த கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர். Read more

14.12.1988இல் மருதங்குளத்தில் மரணித்த தோழர்கள் ஆச்சி (சிவபாலன்- சேமமடு), நாதன் (அருணாசலம் நாகராசா), சின்னவன் ஆகியோரின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன், கிழக்கு மாகாண சபையில் பல்வேறு நிர்வாக பதவிகளை வகித்துள்ளதுடன், இறுதியாக கிழக்கு மாகாண சபையின் சுகாதார சுதேச அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தார்.

பிரித்தானிய இளவரசி ஆன் (Anne) இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 2024 ஜனவரி 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என அமைச்சு கூறியுள்ளது. இளவரசி ஆன், அவருடைய கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமொதி லோரன்ஸூடன் (Timothy Laurence) நாட்டிற்கு வருகை தரவுள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

13.12.2006இல் மரணித்த தோழர் சேகர் (சீனித்தம்பி பேரின்பநாயகம்) அவர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்று..

2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் திருத்தங்களுடன்  41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் அளிக்கப்பட்டன.  2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மாத காலமாக இடம்பெற்று வந்த நிலையில்,  மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று (13) இடம்பெற்றது.  கடந்த நவம்பர் 13 ஆம் திகதி, நிதி அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. Read more