இலங்கை மக்களின் அமைதியான ஜனநாயக, பொருளாதார அபிலாஷைகளுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பை தெரிவிக்கும் யோசனையொன்று, அந்நாட்டின் சர்வதேசத் தொடர்புகள் பற்றிய குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க செனட் சபை உறுப்பினரான பென் காடின் (Ben Cardin), செனட் சபையின் சர்வதேசத் தொடர்புகள் பற்றிய குழுவின் தலைவரும் தரப்படுத்தல் உறுப்பினருமான ஜிம் ரீஷ் (Jim Risch), அதன் பிரதிநிதியான ராஜா கிருஷ்ணமூர்த்தி (Raja Krishnamoorthi) மற்றும் பில் ஜோன்சன் (Bill Johnson) ஆகியோர் இந்த யோசனையை முன்வைத்துள்ளனர். Read more
மன்னார் இறங்குதுறையை அபிவிருத்தி செய்வதற்காக உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. மன்னார் மற்றும் இராமேஷ்வரத்திற்கு இடையில் பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு இந்த இறங்குதுறை விரைவாக அபிவிருத்தி செய்யப்படும் என அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ்.ருவன்சந்திர குறிப்பிட்டார். அண்மையில் மன்னார் இறங்குதுறையை சூழவுள்ள பகுதியை துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டது.
வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற 102 கைதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பிச்சென்ற மேலும் 37 கைதிகளை தேடும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டிஆரச்சி தெரிவித்துள்ளார். கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து நேற்று(11) கைதிகள் சிலர் தப்பியோடியதை அடுத்து, தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. தப்பியோடியவர்களைக் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்தம் இன்று(12) நள்ளிரவு வரை முன்னெடுக்கப்படும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. சுமார் 10 இலட்சம் கடிதங்கள் கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகம் மற்றும் நாட்டின் ஏனைய தபால் அலுவலகங்களிலும் தேங்கியுள்ளதாக அந்த முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார். தபால் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம்(10) பிற்பகல் முதல் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அமரர் தோழர் ரவிமூர்த்தி – கொக்குவில்)
11/12/1984ல் சுழிபுரம் பறாளாயில் இராணுவத்துடனான மோதலில் வீரமரணமடைந்த அமரர் தோழர் ரங்கா (சரவணமுத்து ஜெயமனோகரன்- மாதகல்) அவர்கள்
இன சமத்துவம் மற்றும் நீதிக்கான அமெரிக்காவின் விசேட பிரதிநிதியான டீசிரி கோமியர் ஸ்மித் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். இன்றைய தினம் வருகைத்தரும் அவர் ஒருவார காலம் நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த காலப்பகுதியில் கொழும்பு நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார். மனித உரிமைகள் மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காகவும் அமெரிக்க அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதற்காகவும் அவர் இலங்கையின் பல்வேறு சமூகங்களுடன் கலந்துரையாடவுள்ளார். மலையக தமிழர்கள் சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் முக்கியமான சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.
நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும்(11) தொடர்கின்றது. தபால் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்தார். 27000 தபால் ஊழியர்கள் இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் வடக்கு இளைஞர் முன்னெடுப்பு அமைப்பின் தலைவர் சுந்தரலிங்கம் காண்டீபன் தலைமையில் தேசிய இளைஞர் மாநாடு..!
இரண்டு சொகுசு ரக பயணிகள் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன. குறித்த இரண்டு கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில், நங்கூரமிட்டுள்ளதாக துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதன்படி, 366 பயணிகளுடனும், 489 பணி குழாமினருடனும் வாஸ்கொடகாமா என்ற முதலாவது சொகுசு ரக சுற்றுலாப் பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அதேநேரம், எம்.எஸ் மயின் ஷிஃப் 5 என்ற இரண்டாவது சொகுசு ரக சுற்றுலாப் பயணிகள் கப்பல், 2365 சுற்றுலா பயணிகளுடனும், 967 அடங்கிய பணி குழாமினரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.