Header image alt text

10.12.1999இல் மன்னாரில் மரணித்த தோழர் டேவிட் (மரிசால் அந்தோனி – உயிர்த்தராசன்குளம்) அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

இன்று(10) சர்வதேச மனித உரிமைகள் தினமாகும்.  சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டு இவ்வருடத்துடன் 75 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 1948 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைய ஆண்டு தோறும் டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம், நீதி’ எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டுக்கான மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

எதிர்வரும் 12 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். கலந்துரையாடலின் பின்னர் இரண்டாம் தவணை கடனை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். கடன் மறுசீரமைப்பிற்குப் பின்னர், நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விடும் என்பதை உலகிற்கு அறிவிக்க முடியும் எனவும் நாட்டை நெருக்கடி நிலையிலிருந்து மீட்டெடுக்க அரசாங்கம் கட்டம் கட்டமாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். Read more

வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இன்று (09) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கட்டாருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.  டோஹா மன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். டோஹா மன்ற மாநாடானது (Doha Forum) கட்டார் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் சர்வதேச களம் ஆகும்.  சர்வதேசம் முகங்கொடுக்கும் தீர்மானமிக்க சவால்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒன்றிணைந்து செயற்பாட்டு திட்டங்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். Read more

நன்றி தலைவர் அவர்களே!
வெளிவிவகார அமைச்சின் கொள்கை என்பது இலங்கை போன்ற மிகச்சிறிய நாட்டிற்கு மிக அவதானமாக இருக்க வேண்டிய விடயமாகும். இன்று பூகோள வல்லாதிக்க சக்தி ஒன்றே ஒன்றுதான் அது அமெரிக்கா. பிராந்திய வல்லாதிக்க சக்திகள் எல்லாம் இங்கு தங்களுடைய ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கு முயன்றுகொண்டிருக்கின்ற இந்த வேளையிலே நாங்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.

Read more

08-12-2020 இல் மரணித்த தோழர் கிட்டு (இராமசாமி கிருஷ்ணபிள்ளை) அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் இன்று…..
மலர்வு 1960.03.22
உதிர்வு 2020.12.08
வவுனியா பாவற்குளம் 4ம் யூனிட்டை பிறப்பிடமாகவும் எல்லப்பர் மருதன்குளத்தை வாழ்விடமாகவும் கொண்ட தோழர் கிட்டு அவர்கள் ஆரம்ப காலங்களில் கழகத்தின் பாவற்குளம் பிரதேச பொறுப்பாளராக செயற்பட்டு வந்ததோடு, பின்னர் கட்சி உறுப்பினராக கட்சிப் பணிகளில் மரணிக்கும் வரை மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டு வந்தார்.

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிலைமாறுகால நீதி மற்றும் யுத்தத்திற்கு பின்னரான நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  முன்மொழியப்பட்ட ஆணைக்குழு பாராளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்படுவதோடு, சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்தாலோசித்து குறித்த சட்டமூலம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Read more

யாழ்ப்பாணத்தில் வாள் , நீளமான கத்தி தயாரிக்கும் இடங்களைத் தேடி விசேட சுற்றிவளைப்புகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்ற வாள் வெட்டு சம்பவங்களை கட்டுபடுத்தும் நோக்கில்,  இந்த செயற்பாடு  முன்னெடுக்கப்பட்டு வருவதாக, யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்தார். கடந்த சில வாரங்களாக யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதால், சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளதாக, யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுட்டிக்காட்டினார். Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. இந்த சட்டம் இரத்து செய்யப்படும் வரை அதன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இறுதி யுத்தத்தில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்ததற்காக 9 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கண்காணிப்பாகம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. Read more

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளரும் இராணுவ ஆலோசகருமான எயார் மார்சல் சந்தீப் சிங்கை(Sandeep Singh) சந்தித்துள்ளார். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, முப்படைகளுக்கு இடையிலான பயிற்சி தொகுதிகளை மேம்படுத்துதல், புதிய தொழில்நுட்பம், ஆயுதப் படைகளின் நவீன மயமாக்கல் மற்றும் கூட்டுப் பயிற்சிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது இருவரும் கலந்துரையாடியுள்ளனர். Read more